தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் தொடர்பில் மீளாய்வை கோரும் டக்ளஸ்!

தடைசெய்யப்பட்டுள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் சார்பான அமைப்புக்கள் தொடர்பில் மீளாய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இலங்கையின் சட்ட நியமங்களுக்கு உட்பட்டு சமூக நலத் திட்டங்களை மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ள அமைப்புக்கள் தடை செய்யப்பட்டிருப்பின் அவற்றின் தடைகளை நீக்குவதன் ஊடாக நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

நாட்டினது அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமைய வேண்டியது அவசியமாகும் என குறிப்பிட்டார்.

பிறசெய்திகள்

Leave a Reply