கோட்டாவுக்கு நடுவானில் நடந்த பெரும் அவமானம்! தரையிறங்கிய இந்திய விமானம்

மாலைதீவு வழியாக சிங்கப்பூர் நோக்கிச் சென்ற விமானம், ஜூலை 14 அன்று மாலே விமான நிலையத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அழைத்துச் செல்ல மறுப்பு தெரிவித்து, நடுவானிலேயே இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றதாக உயர்தர வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் மாலைதீவு செல்வதற்காக புறப்பட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் இந்தியா சென்றுள்ளது.

இலங்கை ஜனாதிபதியும், அவரது மனைவியையும் குறித்த விமானத்தில் பயணிக்க இருந்ததாகவும், அதற்கு மறுப்பு வெளியிட்டு, விமானத்தை மீள இந்தியாவுக்கு கொண்டுவருமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாலைதீவில் இருந்து ஜனாதிபதியை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல மூன்று விமானங்கள் தயார் நிலையில் இருந்த போதிலும், பல்வேறு சர்வதேச அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதியை அழைத்துச் செல்ல அவர்கள் மறுத்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

பிறசெய்திகள்

Leave a Reply