ஜனாதிபதி தெரிவில் யாரை ஆதரிப்பது.? முன்னாள் MP அரியம் முன் வைத்துள்ள கோரிக்கை

ஜனாதிபதி தெரிவில் யாரை ஆதரிப்பது.?

தமிழ்தேசிய கூட்டமைப்பு நாளை மறுநாள்(யூலை,20) ஜனாதிபதி தெரிவில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக நாளை (யூலை 19) பாராளுமன்ற குழு கூடி இறுதிமுடிவை எடுப்பதாக அறிகிறோம்..!

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எழுத்துமூலமான கோரிக்கைகளை கையளித்து அவர்களில் யார் சாதகமான பதிலை தருவார்களோ அவரை ஆதரிக்கலாம் என்பது எனது கருத்து..!

அந்த கோரிக்கைகளில்…!

தமிழ்மக்களின் நீண்டகால அரசியல்தீர்வு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை,
பயங்கரவாத்தடைச்சட்டம் நீக்குதல்,
காணாமல் போனவர்கள் தொடர்பான விடுதலை,
காணி ஆக்கிரமிப்பு திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்தல், விடுவித்தல்..

என்பன வற்றுடன்..

மிகமுக்கியமான கோரிக்கையாக அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை பூரண நிர்வாகம் அதிகாரம் கொண்ட பிரதேச செயலக பிரிவாக தரம் உயர்த்தும் பொருட்டு குறிப்பிட்ட காலக்கேடுக்குள் பூரணமாக ஜனாதிபதி உத்தரவாதம் எழுத்துமூலம் வழங்கவேண்டும் என்ற நிபந்தனையையும் இணைக்கும்படி வேண்டுகிறோம்..!

ஏனெனில்..

கல்முனை வடக்கு பிரதேச செயலக தரம் உயர்த்தும் விடயம் வெறுமனமே இது ஒரு பிரதேசத்திற்கான பிரச்சனை இல்லை இது கடந்த்2015, நல்லாட்சி அரசில் தேசியபிரச்சனையாக மாறிவிட்டது என்ற உண்மையை எமது தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதய சுத்தியுடன் புரிந்து கொள்வீர்கள் என நம்பு கிறேன்.!

எவருமே சாதகமான பதிலை தராவிட்டால் ஊடகமாநாட்டை்நடத்தி தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்த எந்த கோரிக்கையையும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடும் எந்த வேட்பாளரும் ஏற்கவில்லை அதனால் தமிழ்தேசியகூட்டமைப்பு எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிக்காமல் விலகி இருப்பது(பகிஷ்கரிப்பது) என்ற முடிவை பகிரங்கமாக தெரிவித்தல் நல்லது.!

வாய்மூலமான நம்பிக்கையூட்டும் உத்தரவாதம் வேண்டாம், கடந்த காலம் இவ்வாறு பல கோரிக்கைகளை வாய்மூலமாக வழங்கி அதனை நம்பி ஏமாற்றம் அடைந்த வரலாறுகள் எமக்கு உண்டு.

நன்றி

பா.அரியநேத்திரன்
18/07/2022

இது எமது தமிழ்தேசிய்கூட்டமைப்பு சகல பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் வக்சப் மூலம் இன்று(18/07/2022) காலை 6.45, மணிக்கு அனுப்பியுள்ளேன்..!

Leave a Reply