மட்டக்களப்பில் ஊழல்வாதிகளுக்கு பின்னால் அடைவு வைத்து பிழைப்பு நடாத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

(கனகராசா சரவணன்)

வடக்கு , கிழக்கு மக்களையும் இளையதலை முறையினரையும் ஊழல்வாதிகளுக்கு பின்னால் அடைவு வைத்து பிழைப்பு நடாத்தியவர்களை கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் தமிழ் இளையோர் அமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (17) கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் இளையோர் அமைப்பின் தலைவர் கே.சபேஸ்வரனின் அழைப்பினையடுத்து இன்று காந்தி பூங்காவிற்கு முன்னால் சிலர் ஒன்று கூடி இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனனர் இதன் போது இதில்கலந்து கொண்ட தமிழ் இளையோர் அமைப்பின் தலைவர் கே.சபேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.தமிழ் தேசத்தை சூறாடம் வகையில் பலர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அவலநிலையான பொருளாதார நெருக்கடிக்கு காத்திரமானவர்கள் என்ற அடிப்படையில் தென்னிலங்கை இளையோர்களால் பலர் அடையாளப்படுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களுடன் வடக்கு கிழக்கில் இணைந்து நின்ற பலர் காணப்படுகின்றனர் எனவே அவர்;கiளை கேள்விக்குட்படுத்துவதுடன் கண்டணத்தை செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.

ஆகவே இந்த கண்டனப் பேரணி இவ்வாறு துண்டாட நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் மேலும் மேலும் எங்களது தமிழ் சமூகத்தின் ஓர்மத்தை சிதைக்கும் வகையில் செயற்படுவார்கள் என்றால் தென்னிலங்கையில் ஒர் படிப்பினையை தந்திருக்கின்றனர்

எனவே நாங்களும் ஊழல்வாதிகளுடன் இணைந்திருந்தவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு மாபெரும் கண்டன ஆர்பாட்டங்களையும் பேரணிகளையும் செய்யவேண்டி ஏற்படும் என தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்தோடு தமிழ் மக்களின் தீர்வுக்கான தமிழ் தலைமைகள் சிந்தித்துக் கொள்ளவேண்டும் எங்களுடைய மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் தீர்வு தளத்தை பலப்படுத்தவேண்டும்.

அத்தோடு இருக்கின்ற காலகட்டத்தில் அரசியலமைப்பின் ஊடாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தமிழ் மக்கள் எந்த தீர்வை எதிர்பார்க்கின்றார்களோ அந்த தீர்வுக்கு ஏற்றமாதிரி தங்களுடைய தீர்வு பயனத்தை மேற்கொள்ளவேண்டும் அல்லது அவர்களால் முடியாவிட்டால் தமிழ் பேசுகின்ற மக்கள் எந்த தீர்வை விரும்புகின்றார் என்ற அடிப்படையில் ஒரு வாக்கெடுப்பு நடாத்த தயாரகாவேண்டும்.

எனவே இன்னும் இன்னும் ஒரே இடத்தில் கதைத்துக் கொண்டு எமது தமிழ் சமூகத்தையும் இளையோரையும் அடைவுவைத்துக் கொண்டு நாங்கள் ஒரு கனவுகளை சிதைத்த சமூகமாக வாழ விரும்பவில்லை ஆகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற எல்லோருக்குமான ஒரு கண்டனமாக இந்த ஆர்பாட்டத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பித்து 11 மணிவரை இடம்பெற்றதுடன் பின்னர் ஆர்பாட்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

Leave a Reply