எவரும் அனுமதி இன்றிப் பேசுவதற்கும் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் வசதியாக சிங்கப்பூரிலும் ‘ஸ்பீக்கேர்ஸ் கோர்ணர்’ என்று ஒர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த இடத்தில் கூடிய சிலர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசு நாட்டுக்குள் தங்க இடமளித்திருப்பதற்குத் தங்கள் எதிர்ப்பைத் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மாலைதீவு வழியாக சிங்கப்பூரில் சென்று இறங்கியது முதல் அங்கு அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையோ ஒன்று கூடல்களையோ நடத்துவதற்கு அந்நாட்டுப் பொலீஸார் அங்குள்ள சட்டங்களின் கீழ் தடைவிதித்திருக்கின்றனர்.
இதனால் அவருக்கு எதிரான குரல்கள் அங்கு தடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியிலேயே ஸ்பீக்கேர்ஸ் கோர்ணர்’ இடத்தில் ஓரிருவர் கூடி எதிர்ப்பு நிகழ்வை நடத்தியுள்ளனர்.
2020 தேர்தலில் மக்கள் குரல் என்ற கட்சி சார்பில் வேட்பாளராக நின்றபிரபு ராமச்சந்திரன் (34)என்பவர் அந்த எதிர்ப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார் என்று சிங்கப்பூரின் ஆங்கில செய்திப் பத்திரிகையான த ஸ்ரெயிட்ஸ் ரைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
பிறசெய்திகள்

