
இளவாலை பொலிஸ் பிரிவில் முகமூடி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!
பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முகமூடி கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்து வீட்டாரை கத்தி முனையில் மிரட்டி அவர்களிடம் இருந்து 20 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 20 மற்றும் 21 வயதான இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

