
இலங்கை மக்கள் நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு பிரார்த்திப்பதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
ஞாயிறு ஆராதனை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அமைதியான முறையில் தீர்வுகளை பெற்றுக் கொடுக்குமாறு பரிசுத்த பாப்பரசர் உரிய தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வன்முறையான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்து செயற்படுமாறும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இலங்கை மக்களின் நலனுக்காக மதத் தலைவர்களுடன் தாதும் இணையப் போவதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
பிறசெய்திகள்

