
முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்தியவசிய தேவைகளுக்காக டீசல் வழங்கும் நடவடிக்கை இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. முள்ளியவளை பகுதியில் உள்ள ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் முல்லைத்தீவு நகரில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் அத்திய அவசிய தேவைக்கான வாகனங்களுக்கு டீசல் வழங்கப்பட்டு வருகின்றது.
தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளின் அறுவடைக்கான முள்ளியவளையில் உள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏக்கருக்கு பத்து லீற்றர் டீசல் என பெருமளவான விவசாயிகளுக்கு டீசல் வழங்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் பேருந்து மற்றும் மீன் ஏற்றுமதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் ஈடுபடும் ஊர்திகளுக்கு முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் வழங்கப்பட்டு வருகின்றது.
ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தின் கீழ் விவசாய செய்கையினை மேற்கொண்டுள்ள விவசாயிகளின் அறுவடைக்கான டீசலை முல்லைத்தீவில் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
பிறசெய்திகள்

