இலங்கை வங்கி பருத்தித்துறை கிளை திறப்பு!(படங்கள் இணைப்பு)

இலங்கை வங்கி பருத்தித்துறை கிளை இன்று பருத்தித்துறை நகர்ப்பகுதியில் புதிய கட்ட பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பருத்தித்துறை வீரவாகு கட்டடத்தில் இயங்கி வந்த இலங்கை வங்கி இன்று திங்கட்கிழமை முதல் பருத்தித்துறை பிரதான வீதி இலக்கம் 86 எனும் இடத்தில் புதிய கட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை வங்கி பருத்தித்துறை கிளையின் முகாமையாளர் இ.ரடாணராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக இலங்கை வங்கி வடமாகாண உதவிப் பொது முகாமையாளர் வல்லிபுரம் சிவானந்தம் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பருத்தித்துறை பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க,இலங்கை வங்கியின் வடமாகாண செயற்பாட்டு முகாமையாளர் சி.ஆனந்தராஜா, யாழ் கிழக்கு பிரதேச முகாமையாளர் திருமதி. உ.யோகராஜசிங்கம் மற்றும் இலங்கை வங்கி உத்தியோகஸ்த்தர்கள், வாடிக்கையாளர்கள், வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் போன்றோர் கலந்து கொண்டனர்.

பிறசெய்திகள்

Leave a Reply