
அரசியல் வேறுபாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை புறந்தள்ளி, இடைக்கால ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிக்க பொது உடன்பாடு ஒன்றிக்கு வருமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்பில் அனைத்து அரசியல் தலைவர்களும் இதுவரையில் எந்தவொரு பொது இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை என அந்த பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒன்றிணைந்த இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவது காலத்தின் தேவையாகும். நிராகரிக்கப்பட்ட தலைவர்களிடம் மேலும் நாட்டின் ஆட்சியை கையளிப்பது சிறந்த விடயமல்ல.
அனைவரினதும் நம்பிக்கையையும் வெற்றிக்கொள்ள கூடிய இடைக்கால ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிக்க உடன்பாடு ஒன்றை ஏற்படுத்துமாறு குறித்த பேரவை வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறு இல்லாவிடில், நிலைமை மேலும் மோசமாகும் என்பதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
பிறசெய்திகள்

