வவுனியா – புளியங்குளம் காட்டு பகுதியில் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இளைஞன் ஒருவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (17) பிற்பகல் தேன் எடுப்பதற்காக எட்டு பேர் கொண்ட குழு புளியங்குளம் கச்சக்கொடி பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்ற போது கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி குறித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த இளைஞரை அப்பகுதியில் இருந்து ஏனையவர்களால் மீட்டு புளியங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.
இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு படுகாயமடைந்த இளைஞன் மாற்றப்பட்டிருந்தார்.
புளியங்குளம் பகுதியை சேர்ந்த நடராசா தர்மராசா (வயது 33) என்ற இளைஞரே கரடியின் தாக்குதலுக்கு இலக்கி படுகாயமடைந்திருந்தவராவார்.
பிறசெய்திகள்

