எரிபொருள் வழங்கும் புதிய முறை அறிவிப்பு!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரமே இனி எரிபொருள் வழங்கப்படும் என அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, அதுவரை சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர பதிவு நடவடிக்கை நிறைவு பெறும் வரை புதிய எரிபொருள் விநியோகிக்கப்படாது என இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply