புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று கொடியேற்றம்!

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று கொடியேற்றம்!

வரலாற்று சிறப்பு மிக்க கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா இன்றைய தினம் கலவெட்டித்திடல் கற்பகவிநாயகர் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை எடுத்துவரப்பட்டு கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக ஆரம்பமானது.

27ம் திகதி தேர்த்திருவிழாவும் 28ம் திகதி ஆடி அம்மாவாசை தினமன்று தீர்த்தோற்சவம் ஆலய தீர்த்த கேணியில் நடைபெற இருக்கின்ற நிலையில் அன்றைய தினம் தந்தையை இழந்தவர்கள் இங்கு சங்கற்பம் செய்ய முடியும் எனவும் ஆலய நிர்வாகத்தினர் அறிய தந்துள்ளனர்.

(புகைப்பட உதவி: நயனீசன்)

Leave a Reply