பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை! அமைச்சர் தகவல்

எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைய பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன ஆலோசனை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளமைக்கு அமைய பயணிகளுக்கு பஸ் கட்டணங்களில் நிவாரணம் வழங்கப்படுவது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பஸ் கட்டண திருத்தங்கள் நாளைய தினம் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேசிய எரிபொருள் அனுமதி பத்திர திட்டம் மீனவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் மீனவ சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

மீனவர்களுக்கும் குறித்த சலுகை வழங்கப்பட வேண்டும் என மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பிறசெய்திகள்

Leave a Reply