யாழ்ப்பாண மாநகர சபையின் இன்றைய மாதாந்த அமர்வில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் ஆரிய குளத்தின் நடுவே தமிழ் அன்னையின் சிலை ஒன்றை வைக்கவேண்டும் என்று உறுப்பினர் ஒருவர் பிரேரணை ஒன்றை முன்வைத்தார். அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அந்தவகையில் 25 அடிக்கும் குறையாத சிலை ஒன்று நிறுவுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கான நிதி எம்மிடம் இல்லை. ஆகவே நன்கொடையாளர்களிடம் இருந்து நிதியைப் பெற்று இந்த சிலை நிறுவும் நடவடிக்கைளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம் என மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்



