சந்தேகத்திற்கிடமான பயணப்பொதியால் ஹட்டன் பேருந்து நிலையத்தில் இன்று மாலை சில மணி நேரம் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டிருந்தது.
ஹட்டன் பிரதான பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்கள் நிறுத்தி வைக்குமிடப்பகுதியில் உரிமையாளர் இல்லாத நிலையில் கிடந்த சூட்கேஸ்ஸால் இந்த பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

நீண்ட நேரமாக குறித்த சூட்கேஸ் அப்பகுதியில் இருந்துள்ளது. எனினும், யாரும் உரிமை கோர முன்வராததால் இந்த நிலை ஏற்பட்டது.

பின்னர், பயணிகளாலும், கடைத்தொகுதி உரிமையாளர்களாலும் அட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்த இடத்திலிருந்து மக்களையும், பேருந்துகளையும் துரிதமாக அப்புறப்படுத்தி மக்கள் அற்ற பிரதேசமாக மாற்றினர்.
அதையடுத்து, வெடிபொருட்களை தேடும் பணியில் ஈடுபடும் போலீஸ் நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை செய்ததில், பயணி ஒருவர் குறித்த சூட்கேஸ்சை விட்டுச் சென்றுள்ளதாகவும், குறித்த சூட்கேஸ்சில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக மேற்படி சூட்கேஸ் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அட்டன் நகரம் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடதக்கது.

பிறசெய்திகள்
- பதில் ஜனாதிபதி ரணில் நாட்டு மக்களுக்கு விசேட உரை!
- வாளிக்குள் விழுந்த ஒரு வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்!
- ரயிலில் மோதி கார் விபத்து; கர்ப்பிணி பெண்ணும் குழந்தையும் உயிரிழப்பு!
- நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவாத பிரிட்டன்!- முன்னாள் இராஜதந்திரி கவலை
- தேயிலை ஏற்றுமதி 08 வீதத்தால் வீழ்ச்சி!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka

