டீசல் தரையிறக்கம்; பெற்றோல் மாதிாி பரிசோதனைக்கு!

நாட்டை வந்தடைந்துள்ள பெற்றோலின் மாதிரி தற்போது தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றை தரை இறக்கும் பணி நாளை தொடங்கும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், சிலோன் பெட்ரோலிய சேமிப்பு முனையத்தின் (CPSTL) பிராந்திய களஞ்சியசாலைகளுக்கு நாளை தொடருந்து மற்றும் தாங்கி ஊர்திகள் மூலம் விநியோகம் தொடங்கப்படும்.

இதேவேளை, இரண்டு சரக்கு கப்பல்களில் டீசல் இறக்கும் பணி கொழும்பு துறைமுகத்தில் நிறைவடைந்துள்ளதுடன், மற்றுமொரு சரக்கு கப்பலில் இருந்து எரிபொருள் இறக்கும் பணிகள் தற்போது துறைமுகத்தில் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய இளைஞர் படை மற்றும் அதன் உறுப்பினர்களுடன் இளைஞர் விவகார அமைச்சும், தேசிய எரிபொருள் அட்டை பெறும் முயற்சிக்கு உதவ முன்வந்துள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவினை மேற்கொள்ள பொதுமக்களுக்கு தேசிய இளைஞர் படையணி உதவும் என்றும், இந்த செயல்முறை கிராமப்புறங்களிலும் விஸ்தரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பிறசெய்திகள்

Leave a Reply