எதிர்வரும் 29 ம் திகதி ஆரம்பமாகவுள்ள கதிர்காமம் கொடி ஏற்றத்தை தொடர்ந்து மலையக பகுதிகளில் இருந்து பாதையாத்திரை ஆரம்பித்து உள்ளனர்.
இன்று காலை சாமிமலை நகரில் இருந்து இந்த பாதை யாத்திரை ஆரம்பித்துள்னர்.
இந்த பாதை யாத்திரை மஸ்கெலியா, நோர்வூட், டிக்கோயா, ஹட்டன், கொட்டகல, தலவாகல,லிந்துல,நானுஓயா,நுவரெலியா,பொரகஸ்,ஹப்புதளை,பண்டாரவல,வெள்ளவாய வழியாக கதிர்காமம் சென்றடைய உள்ளது.
தொடர்ந்து பத்து நாட்கள் இடம்பெறும் இந்த பாதை யாத்திரை ஆங்காங்கே ஆலயங்களில் தங்கி செல்ல ஏற்பாடு செய்து உள்ளனர்.
இடையிடையே யாத்திரிகர்கள் இனைந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்.


பிறசெய்திகள்

