
கொழும்பு, ஜுலை 19
நாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறவுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பாக நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் – ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைக்கு மாறாக, சமூக வலைத்தளங்கள் ஊடாக செல்வாக்கு செலுத்துபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் ஜனாதி பதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்கள் ஊடாக விடுக்கப் படும் அச்சுறுத்தல்களினால் சுதந்திர மாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த அறிவித்தலை கருத்திற்கொண்டு பதில் ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டம் மற் றும் அது தொடர்பான குற்றவியல் சட் டங்களின் கீழ் இது தொடர்பான சம்ப வங்களை விசாரிக்குமாறு அவர் அறி வித்துள்ளார்.

