-கேதீஸ்-
20-2022 நாளை.. இலங்கை மக்கள் பெரும் ஆவலோடு போட்டி முடிவுகளுக்காக காத்திருப்பு!
இலங்கை வரலாற்றில் முக்கியமான ஒரு நிகழ்வு நாளை 20 (20.07.2022) இடம் பெற உள்ளது.
நான்கு முனைப் போட்டியா, மூன்று முனை போட்டியா என்பது இ
ன்று தெரியும்
இலங்கையின் புதிய ஜனாதிபதி இலங்கை வரலாற்றில் முதன் முறையாக புதிய முறையில் தெரிவு செய்யப்பட இருக்கின்றார். பெரும் ஆரவாரத்தோடு பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இலங்கையை விட்டு தப்பி ஓடி வெளிநாட்டிலிருந்து பதவி விலகிய சம்பவம் அதுவும் ஒரு வரலாற்று பதிவு. இந்நிலையில் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முறை இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்துக்குள்ளையே நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் தெரிவு செய்யும் மற்றும் ஒரு வரலாற்றுப் பதிவும் நாளை இடம் பெற உள்ளது.. இதனை 2022.20 என வர்ணிக்கலாம்.
தற்போது பதில் ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அனுர போட்டியாளர்களாக தற்போது வரை பெயர்கள் முன் மொழியப்பட்டுள்ளன. இன்று வேட்பு மனு தாக்கல்.
இதில் தமக்கான ஆதரவுகளை திரட்டும் பேரம் பேசல்கள் தீவிரம் அடைந்துள்ளன… சில போட்டியாளர்கள் இறுதி நேரத்தில் வாபஸ் வாங்கலாம் என்ற ஊகங்களும் எழாமல் இல்லை.
இந்தப் போட்டியாளர்களிl வெற்றி வாய்ப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருப்பதாக முணுமுணுப்புக்கள் அதிகம் உள்ளதை அவதானிக்க முடிகிறது.
நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட ரணில் விக்கிரமசிங்க கடந்த தேர்தலில் அடைந்த பின்னடைவை சீர் செய்ய இந்த வாய்ப்பை தனக்கேயான தந்திரங்களால் முடிந்தவரை முயற்சிப்பார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கை மக்களின் பொருளாதாரத்தை நிமிர்த்துவதன் மூலம் இழந்த செல்வாக்கை மீளப்பெற்றுக் கொள்ளவும், மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள ராஜபக்சகளின் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலமும் மக்களின் ஆதரவை பெறலாம். எப்படியாவது ஜனாதிபதியாக தெரிவானால் இந்த விடயங்களை ரணில் கச்சிதமாக காய் நகர்த்தி தனது அரசியல் செல்வாக்கை பாதுகாத்துக் கொள்வார். அது அவருக்கு அவசியமாகவும் காணப்படுகிறது. இதுவும் மக்கள் மத்தியில் உள்ள ஊகமும் ஆகும்.
பரபரப்பாக இருக்கும் இலங்கையில் நாளை என்ன நடக்கும் என்பதை இலங்கை மக்கள் மாத்திரம் அல்ல உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.





