புதிய ஜனாதிபதிக்கான தெரிவு : நாடாளுமன்றில் இன்று வேட்புமனுக்கள் தாக்கல்

எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் இன்று (19) காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு நடைமுறைச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற பொதுச் செயலாளர் வேட்புமனுக்களுக்கான அழைப்பை விடுப்பார்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி சார்பாக அனுர குமார திஸாநாயக்க, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதிக்கான தெரிவில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் புதிய ஜனாதிபதியை தெரிவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இன்று நாடாளுமன்றில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கட்சியின் வேட்பாளரை முன்மொழிய மற்றுமொருவர் அதை ஆமோதிக்க வேண்டும். இதன்போது சம்பந்தப்பட்ட வேட்பாளர் அறையில் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

Leave a Reply