கூரை தகடுகள் களவு; பொலிஸ் நிலையத்தில் புகார்!

மஸ்கெலியா – சாமிமலை டீசைட் தோட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் தனி வீட்டு திட்டத்தின் கூரைத் தகடுகள் களவாடப்பட்டுள்ளதாக இன்று (18) மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை (18) அவ்வழியே தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள் குறித்த வீட்டின் கூரை கழற்றப்பட்டுள்ளதை கண்டு , தோட்ட நிர்வாகத்திற்கு தகவல் வழங்கினர்.

இதனை தொடர்ந்து தோட்ட நிர்வாகத்தால் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

இவ்வாறு தொடர்ந்து கவனிப்பாரற்று இருக்குமேயானால் உள்ள அனைத்து பொருட்களும் சூறையாடி விடுவது நிச்சயம்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து இந்த குடியிருப்புக்களை முழுமையாக செப்பனிட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

மத்திய மலைநாட்டில் பல பகுதிகளில் இவ்வாறு கட்டிடங்கள் காணக்கூடியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply