கச்சேரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் – டீசல் விநியோகம் உள்ளதா?

வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிழமை நாட்களில் குறித்த கிராம சேவகர் பிரிவுகளுக்கே நுணாவில் IOC எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படுமென நுணாவில் IOC எரிபொருள் நிரப்ப நிலைய உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள்.

அந்தவகையில் அனைத்து மக்களுக்கும் எரிபொருள் கிடைக்கும் வண்ணம் புதிய எரிபொருள் அட்டை நடைமுறையின்படி, பின்வரும் நடைமுறையின் கீழ் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படுமென தெரிவித்துள்ளார் .

கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டை உள்ளவர்களுக்கு,,நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வருகின்ற வியாழன், வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் கீழ் காணப்படும் கிராம சேவகர் பிரிவுகளுக்கு பெற்றோல் வழங்கப்படும் .

வருகின்ற வியாழக்கிழமை ,
J-301,J-302,J-303,J-304,J-305,J-306,J-307, கிராம சேவகர் பிரிவிற்கும் ,

வருகின்ற வெள்ளிக்கிழமை
J-308,J-309,J-310,J-311,J-312,J-313,J-314, கிராமசேவையாளர் பிரிவிற்கும்

வருகின்ற சனிக்கிழமை, j -340,J-341,J-342,J-343,J-344,J-345,J-346,J-347, கிராமசேவையாளர் பிரிவிற்கும் எரிபொருள் வழங்கப்படுமெனவும் ,

மேலும் , மேல் காணப்படும் கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் எரிபொருள் அட்டை பெற்றுக் கொள்ளாது இருந்தால் உங்கள் கிராமசேவகரை தொடர்புகொண்டு எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்ளுங்கள்.

ஏற்கெனவே மேல் காணப்படும் கிராமசேவகர் பிரிவில் எரிபொருள் அட்டையினை பெற்று எரிபொருளினை பெற்றுக்கொண்டவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது.

ஏனைய கிராமசேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களுக்கு அடுத்து வரும் கிழமை நாட்களில் படிப்படியாக எரிபொருட்கள் வழங்கப்படுமெனவும் , கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டையை கொண்டு வருபவர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படுமெனவும் அட்டை கொண்டு வராதவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது எனவும் நுணாவில் IOC எரிபொருள் நிரப்ப நிலைய உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா தெரிவித்துள்ளார் .

பிறசெய்திகள்

Leave a Reply