வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்  மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்  மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்  மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படுகாயங்களுக்குள்ளான குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு சென்று திரும்பிய போது மருத்துவமனைக்கு அண்மையாக வீதியில் நின்ற 10 பேர் கொண்ட மற்றுமொரு வன்முறைக் கும்பல் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துள்ளது.10 பேர் கொண்ட  கும்பலே தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதல் நடத்தியவர்களில் அளவெட்டியைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டதுடன் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வன்முறைக் கும்பலுக்கிடையிலான முறுகல் நிலையே இந்த வாள்வெட்டுத் தாக்குதலுக்கு காரணம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply