மனிதாபிமான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

மனிதாபிமான உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு சர்வோதயம் நிறுவனத்துடன் இணைந்து ஹேமாஸ் மற்றும் டயலொக் ஆகியன இணைந்து உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கிய தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நேற்று (19) வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி வழிகாட்டுதலுக்கிணங்க குறித்த உலர் உணவுப் பொதிகளானது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காக வழங்கப்பட்டன.

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்கு மொத்தமாக 600 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் இதனை உரிய பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

பொற்கேணி,புதுக்குடியிருப்பு ,மீரா நகர் உட்பட கிராம சேவகர் பிரிவுக்கும் வழங்கப்பட்டன.

இதில் சர்வோதய நிறுவன ஊழியர்கள் ,அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் கருனாகரன் உட்பட பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

பிறசெய்திகள்

Leave a Reply