அடுத்த மாதம் அதிகரிக்கிறது மின்கட்டணம்

நாட்டில் எதிர்வரும் ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் இருந்து மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் அதன் தலைவர் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்ததாவது:–

தற்போதுள்ள மின்சாரக் கட்டணம் 69 சதவீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இலங்கை மின்சார சபை 130 சதவீத கட்டண உயர்வை கோரிய போதும் குறைந்த மின்சார பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி இந்த கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் – என்றார்.

இதேவேளை மின் கட்டண திருத்தத்தை இறுதி செய்யும் செயல்முறைக்கான முன்மொழிவுகளை பொதுமக்கள் சமர்ப்பிக்கும் காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ளது.

இந்தநிலையில் திருத்தியமைக்க உத்தேசித்துள்ள கட்டணங்களை விவாதித்து இறுதி செய்ய இலங்கை மின்சார சபை மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியவற்றை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அழைக்கவுள்ளது.

அதன்படி ஓகஸ்ட் மாத ஆரம்பத்திலிருந்து மின்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply