நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் பங்கெடுப்போம் – சுதந்திரக் கட்சி

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் சுதந்திரக் கட்சி பங்கேற்கும் என அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்துரையாடி ஒருமனதாக முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

வாக்கெடுப்பை நடத்தாமல் கலந்துரையாடி நியாயமான தீர்மானத்தை எட்ட அவர்கள் முடிவு எடுக்க வேண்டும் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சி ஒருபோதும் வாக்களிப்பை புறக்கணிக்க போவதாகக் கூறவில்லை, அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னரே இறுதித் தீர்மானம் என தெரிவித்தார்.

Leave a Reply