ஒக்டோபரில் சற் ஸ்கோர் வெளியீடு!

<!–

ஒக்டோபரில் சற் ஸ்கோர் வெளியீடு! – Athavan News

2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சற் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகள் ஒக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சற் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகளை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.ugc.ac.lkஇல் வெளியிடப்படும்.

நாட்டில் கொரோனா அலையின் தாக்கம் காரணமாக உண்டான பல சிக்கல்களினால் சற் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை 2020 ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply