குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தினால் பிரதேச செயலகத்திற்கு மனு கையளிப்பு

குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தினால் இன்று பிரதேச செயலகத்திற்கு மனு ஒன்று கொடுக்கப்பட்டது.

இவ் மனுவானது கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் யூ.சகாயராஜாவினாலும், செயலாளர் ஜேம்ஸ் ப்ரிங்க்டன் அகியோரினாலேயே இவ் மனு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் கையளிக்கப்பட்ட மனுவில் உள்ள விடயங்களாவன ,

எமது சங்கத்தில், உள்ளிணைப்பு இயந்திரங்களைக் கொண்ட 428 ஒருநாள் கடற்கலங்கள், டீசல் எரிபொருள் மூலம் இயங்குபவையாகும். இவ்வகையான படகுகளிற்கு ஒரு வாரத்திற்கு 66000 வீற்றர் டீசல் எரிபொருள் தேவையாகவுள்ளது.

மேலும், வெளியிணைப்பு இயந்திரங்கள் மூலமாக இயங்கும் 450 சிறிய படகுகளும் எம்மிடம் உள்ளன. இவற்றிற்கு ஒரு வாரத்திற்கு 54000 லீற்றர் மண்ணெண்ணை தேவையாகவுள்ளது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில், எமது தொழிலாளிகளுக்குத் தேவையான எரிபொருளின் மூன்றில் ஒருபங்கை (1/3) மட்டுமே எம்மால் பெறக்கூடியதாகவுள்ளது.

இதன் காரணமாக, எமது கடற்றொழிலுக்குச் தொழிலாளர்கள் பெரும்பான்மையான பகுதிக்குட்பட்ட செல்லமுடியாமலிருப்பதோடு வேறுதொழில் முயற்சியிலும் ஈடுபட முடியாமலும், எந்தவித வருமானமுமின்றி பட்டினி நிலையை எதிர்கொள்ள வேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மேலும், எமது ஒரு நாட்காலங்கள் தொழில் அறுவடை செய்யப்படும் இறால், நண்டு, கணவாய் ஆகிய கடலுணவுகள் இலங்கையின் முக்கியமான ஏற்றுமதிப் பொருட்களாக அமைந்துள்ளன.

எனவே தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில், வெளியிணைப்பு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இயந்திரங்களைப் பயன்படுத்தி, சிறிய இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்படும் நண்டு, கணவாய் என்பன மூலமாகவும் அந்நிய செலவாணியை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதனையும் தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றோம். செலவாணியைப் பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கும் என்பதனையும் தங்களுடைய மேலான கவனத்திற்க்கு கொண்டுவருகின்றோம்.

எனவே, எமது நிலையினைக் கருத்திற்கொண்டு, எமக்குத் தேவையான எரிபொருளினைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய கேட்டுநிற்கின்றோம்.

கடந்த ஜீன் மாதம் 30 ம் திகதிக்கு பின் எரிபொருள் வழங்கப்படவில்லை என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம். என குறிப்பிடப்பட்டிருந்தது.

பிறசெய்திகள்

Leave a Reply