சிதறியது பசிலின் மொட்டு!
-கேதீஸ்-
இலங்கையின் இந்த பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமான ராஜபக்சக்களும் ஆட்சியமைத்த மொட்டு கட்சியும் என்பது பரவலான குற்றச்சாட்டு.
மொட்டு கட்சியை வளர்ப்பதில் முக்கியத்துவம் கொடுத்த அந்த கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சர்மான பசில் நாட்டின் பொருளாதாரத்தில் அக்கறை செலுத்தவில்லை என்பது மற்றுமொரு குற்றச்சாட்டு.
இரவு பகலாக பசில் உருவாக்கிய மொட்டுக் கட்சி இன்று பல கூறுகளாக பிளவுபட்டு காணப்படுகின்றது.
நாளை இடம் பெறும் பரபரப்பான ஜனாதிபதி தெரிவில் மொட்டுக் கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு அணியினர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இன்னும் ஒரு அணியினர் டலஸ் அழகப்பெருமாவுக்கும் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் இன்னும் சிலர் எந்த முடிவும் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் பசிலின் மொட்டு சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது





