ஐரோப்­பிய நாடு­க­ளில் வரலாறு காணாத வெப்­பம்! -1000 பேர் வரையில் உயி­ரி­ழப்பு

ஐரோப்­பிய நாடு­க­ளில் வர­லாறு காணா­த­ள­வில் தற்­போது வெப்­ப­நிலை அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில் போர்த்­துக்­கல் மற்­றும் ஸ்பெய்ன் ஆகிய நாடு­க­ளில் வெப்­ப­அ­லை­யால் இது­வரை ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­துள்­ள­னர் என அதிர்ச்­சித் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

அண்­மைய நாள்­க­ளாக லண்­டன் உள்­ளிட்ட ஐரோப்­பிய நாடு­க­ளின் மேற்­கத்­திய பகு­தி­யில் வெப்ப அலை அதி­க­ரித்­துள்­ளது. இவற்­றில் போர்த்­துக்­கல், ஸ்பெய்ன் ஆகிய நாடு­க­ளில் அதி­க­ளவு பாதிப்பு பதி­வா­கி­யுள்­ளது. அத்­து­டன் அங்கு காட்­டுத்­தீ­யும் ஏற்­பட்­டுள்­ளது.

இத­னால் போர்த்­துக்­கல் நாட்­டில் மாத்­தி­ரமே கடந்த வாரம் 659 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர் என அந்­நாட்டு பொதுச்­சு­கா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அதன் அண்டை நாடான ஸ்பெய்­னி­லும் வெப்­பம் கார­ண­மாக இது­வரை 368 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். இந்­த­நி­லை­யில் அந்த நாடு­க­ளில் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply