
தொழில் வல்லுநர்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு புதிதாக வருகை தந்துள்ளவர்கள் டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாக்குவது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
ஊடகங்ளுக்கு இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மோசடி மற்றும் ஊழலற்ற ஒருவரே நாட்டை வழிநடத்த வேண்டும். மேலும், அழகப்பெரும அத்தகைய பண்புகளை கொண்டவர்.
அடுத்த 18 மாதங்களில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான தனது திட்டங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், அழகப்பெருமவால் தேவையான வாக்குகளை விட சுமார் 20 வாக்குகளை அதிகம் பெற முடியும் என தெரிவித்துள்ளார்.





