வவுனியா நகரிலுள்ள பெரியார் சிலைகளை நகரசபை பொறுப்பேற்று அதனை ஒழுங்குபடுத்தி ஏற்பாட்டுக்குழு நியமிக்கப்பட்டு முறையாக அவர்களது நினைவு தினங்களை ஏற்பாடு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் அண்மைய சில நினைவு தினங்களை முறையாக பின்பற்றப்படவில்லை.
இதனால் முன்னர் சமூக ஆர்வலர்கள் இப்பணிகளை மேற்கொள்ள முன்வந்தபோது அதனை தடுத்து அவர்களையும் செய்யவிடாமல் நகரசபையும் தற்போது செய்யவில்லை என்று சமூக ஆர்வலர்கள் சிலர் முறையிட்டுள்ளனர் .
நகரிலுள்ள பெரியார்களின் சிலைகளை பொறுப்பேற்று வர்ணம் பூசுதல் சிரமதானங்களை மேற்கொள்ளல் நினைவு தினங்களை ஏனையவர்களுக்கு தெரிவித்து ஏற்பாடு செய்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது.
எனினும் தற்போது அந்த நடைமுறை அனைத்தும் கைவிடப்பட்டுள்ளது. சிலைகள் பராமரிப்பு உட்பட பெரியார்களின் நினைவு தினங்களை கூட குறிப்பிட்ட தினங்களில் நினைவு கூரப்படுவதில்லை.

இன்றைய தினம் தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது நினைவு தினத்தை ஏற்பாடு செய்த சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மீண்டும் பெரியார்களின் நினைவு தினங்களை ஏற்பாடு செய்வதற்கு முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் .
பிறசெய்திகள்





