
உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசியாகக் கருதப்படும் நாஸ்ட்ராடாமஸ், 2022ஆம் ஆண்டு அணுகுண்டுகள் வெடிப்பி்ன் காரணமாக பருவநிலை மாற்றம், பணவீக்கம் ஏற்படும் என 500 ஆண்டுகளுக்கு முன்னர் கணித்துள்ளார்.
1503 ஆம் ஆண்டு பிரான்ஸில் பிறந்த நாஸ்ட்ராடாமஸ் சட்டப் படிப்புக்கு பாதியிலே முழுக்குப் போட்டுவிட்டு மருத்துவம் பயின்றார். மருத்துவம் பயின்றபோதும் ஜோதிடத்தின் மீதுதான் நஸ்ட்ராடாமஸுக்கு ஈர்ப்பு.
தனது வீட்டின் மேற்தளத்தை ஜோதிடம் சார்ந்த ஆய்வுகளுக்கு ஏற்ப வடிவமைத்து அங்கு தனக்குத் தோன்றியவற்றை ‘Almanac’ பஞ்சாங்க வடிவத்தில் வெளியிட ஆரம்பித்தார்.
ஆரம்ப காலக்கட்டத்தில் வைத்தியமும், ஜோசியமும் மக்களுக்கு கூறி வந்தாராம். இவரின் தீர்க்கதரிசனம் தன்னுடைய மரணத்தையே கூறும் அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் எதையும் நேரடியாக கூறுவதில்லை. மாறாக குறிப்பால் உணர்த்துவார். அவரிடம் வழக்கமாக வரும் மக்களிடம் ‘நாளை நான் இருக்க மாட்டேன் வராதீர்கள்’, என்று கூறியுள்ளார். மறுநாள் அவரின் மரணம் நிகழ்ந்திருக்கிறது.
பைபிளுக்குப் பிறகு அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அதிக மக்களால் கவனம்பெற்ற நூல் நாஸ்ட்ராடாமஸ் எழுதிய ‘The Centuries’ (The Prophesies) ஆகும்.
பிரெஞ்சு புரட்சி, நெப்போலியன், முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், ஹிட்லர், முசோலினி, லேடன் என உலகில் நடந்த பல முக்கியச் சம்பவங்களை 1550- ஆண்டுகளிலேயே தனது கணித்துள்ளார்.
நடந்தது, இன்னும் நடக்கப்போவது என்று நாஸ்ட்ராடாமஸ் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
அவருடைய குறிப்புகளைத் திரும்பத் திரும்ப ஆராய்ந்து, அவர் சொன்னவற்றில் எவையெல்லாம் நடந்திருக்கின்றன என்று வியந்துபோகிறார்கள் ஆய்வாளர்கள். அவரால் எப்படிச் சரியாக எதிர்காலத்தைக் கணிக்க முடிந்தது என்பது இன்றும் யாராலும் விளங்கிக்கொள்ள முடியாத ஆச்சர்யம்.
சிலர், நாஸ்ட்ரடாமஸ் கூறியது பொய் என்று கூறுகின்றனர். தன் நூலை சிலர் சுயநலத்துக்காகப் பயன்படுத்துவார்கள் என்று கருதி தனது கணிப்புகளைக் குறியீடுகளாகவும், புதிராகவும் செய்யுள் வடிவில் அமைத்தார் நாஸ்ட்ரடாமஸ். பிற்காலத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் சரியாக மொழிபெயர்க்காததே தவறு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் 2022-ஆம் ஆண்டு உலகில் அணுகுண்டுகள் வெடிக்கும். அதனால் ஏற்படும் கதிர்வீச்சால் உலகின் தட்ப வெப்ப நிலை மாறி பனிப்பாறைகள் உருகும். இது கடல் நீர் மட்டத்தை அதிகரிக்க செய்யும் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். இவை ஒவ்வொன்றாக நடக்கின்றன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இந்தநிலையில் 2023-ஆம் ஆண்டு மிகப்பெரிய உலகப்போர் வெடிக்கும் என்று நாஸ்ட்ராடாமஸ் கூறியுள்ளார். உலகமே இருளில் மூழ்கும் என்றும் அவர் கணித்து உள்ளார். இது ஜோதிட ரீதியாக நம்பிக்கை வைத்திருக்கும் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





