சாணக்கியன் எம்.பி பிரதமர் – வெளியான பகீர் அறிவிப்பு

சாணக்கியன் எம்.பி பிரதமராக வருவதற்கு தகுதி உள்ளது, அதைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்திக்கவில்லை என அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார் சங்கத்தின் புத்தளம் மாவட்டத்தின் தலைவர் பிரம்ம ஸ்ரீ சோமசுந்தரம் தியாகராஜா குருக்கள் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில், இன்று திடீர் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

ஆகவே டளஸ் அழகப்பெரும ஜனாதிபதியாவும், சஜித் பிரேமதாச பிரதமராகவும் வருவதற்கான சாத்தியங்கள் இப்போது தோன்றுகின்றன.

யுத்த காலப் பகுதியில், ராஜ தந்திரத்தை ரணில் அன்று காட்டியிருந்தார்.ஆகவே தான் தமிழ் மக்களுக்கும் ரணில் வேண்டாதவராய் போய்விட்டார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தினால் தான் கோட்டா வெளியேற்றப்பட்டார். இது தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எல்லா காலத்திலும் முக்கிய நேரங்களில் நடுநிலைமை வகிக்கின்றனர்.

ஏனென்று தெரியவில்லை. சம்பந்தன் ஐயாவுக்கு புரியவில்லையா ஒன்றும். நாட்டின் ஜனாதிபதியாக தமிழர் வரமுடியாது. ஆனால் சாணக்கியன் எம்.பிக்கு பிரதமராக வரக்கூடிய தகுதிகள் உள்ளன. ஆகவே சிங்கள மக்களுடன் இணைந்து, இடைக்கால ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டும்.- என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply