
இலங்கையில் இருந்து விமானம் மூலம் இந்தியா சென்றவர் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தவறான முடிவு எடுத்து உயிர் மாய்த்துள்ளார்.
வவுனியா – புளியங்குளத்தைச் சேர்ந்த சந்திரசேகரம் சம்பந்தன் என்னும் 25 வயதையுடைய இளைஞனே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
இலங்கையில் இருந்து 25.02.2021 அன்று விமானம் மூலம் சென்னை சென்றுள்ளார்.
பின்னர் ஒசூர் பகுதியில் தொழில் புரிந்து விட்டு 06.01.2022 அன்று இராமேஸ்வரம் தனுஷ்கோடி சென்றவேளை, மரைன் போலீசார் விசாரணை செய்த பின்னர் மண்டபம் தனித்துணை ஆட்சியர் மூலம் 06.01.2022 முதல் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர், வெளியில் கட்டட வேலைக்கும் சென்று வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று தங்கியிருந்த இடத்தில் தூக்கிட்டு தவறான முடிவு எடுத்து உயிர் மாய்த்துள்ளார். எனினும் அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
பிறசெய்திகள்





