வவுனியா – செட்டிகுளம் துடரிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைக்கு பாதுகாப்புக் கடவை அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையினால் இறம்பைக்குளம் ஈஷி மிஷனிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாதுகாப்புக் கடவை அமைக்கப்பட்டுள்ளது.
துடரிகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது இருவரின் உயிர் காவு கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதிக்கு பாதுகாப்பான புகையிரதக்கடவை அமைத்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் அண்மையில் மேற்கொண்டனர் .

இந்நிலையில் இன்றைய தினம் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்தன அழகக்கோனினால் பாதுகாப்பான புகையிரதக்கடவை அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இறம்பைக்குளம் ஈஷி மிஷன் இயக்குநர், வெங்கலச்செட்டிகுளம் பிரதேசபை தலைவர், செட்டிகுளம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, செட்டிகுளம் மேலதிக பிரதேச செயலாளர், கிராம அலுவலகர், சர்வமத தலைவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.





