தினேஷ் குணவர்தனவை பிரதமராக நியமிக்க வேண்டும்: பொதுஜன பெரமுன

கொழும்பு,ஜுலை 19

அமைச்சர் தினேஷ் குணவர்தனவை பிரதமராக நியமிப்பதே தமது நோக்கம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அனுப பாஸ்குவல் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது குறைகளை சிறந்த நாளை நோக்கி திருத்திக் கொள்வதோடு அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் கவனம் செலுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நெருக்கடியிலிருந்து நாடு மீள வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Leave a Reply