
கொழும்பு,ஜுலை 19
நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற அக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக
அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.





