ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பு;தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிரடி முடிவு!

நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இன்றிரவு நடைபெற்றது.

கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வேட்பாளர் டலஸ் அழகப்பெரும ஆகியோரும் கலந்துகொண்டு கூட்டமைப்பினருக்கு வழங்கிய உத்தரவாதத்தைத் தொடர்ந்து மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply