சிங்கள மக்களே ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கும் போது எதிரணியினராகிய நாம் தற்போது அவசரப்பட வேண்டிய தேவையில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
மேலும், தற்போது தெற்கு அரசியலில் ஆட்சி மாற்றம் என்ற ஒரு காற்று வீசுகின்றது எனினும், எதிரணியினர் ஆகிய நாம் பொறுத்திருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு வாக்களித்த சிங்கள மக்களே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் எதிர்கட்சியாகிய நாங்கள் உள்ளோம்.
ஆனால், ஒரு கேள்வி எழுகின்றது, நீங்கள் எதிர்க்கட்சிகள் ஏன் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என அதற்கு நாங்கள் கூறும் பதில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தை சிங்கள மக்களே உங்களது ஆட்சி போதும் வீட்டுக்குப் செல்லுங்கள் என்று கூறும் நிலைதான் தற்போது உருவாகி உள்ளது.
எனவே, சிங்கள மக்களே ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பு முயற்சிக்கும் போது எதிரணியினராகிய நாம் தற்போது அவசரப்பட வேண்டிய தேவையில்லை என்றார்.
மேலும், இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் டக்ளஸ் தேவானந்தவிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது.
எங்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் குரல் கொடுப்பேன். வடக்கு மீனவர்கள் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினை அவர்கள் ஏற்கனவே துன்பத்தை சந்தித்தவர்கள்.
யுத்தத்தை நாம் விரும்பவில்லை யுத்தத்தை செய்தவர்களிடம் தர்க்க ரீதியிலான கருத்து இருந்தது. வடக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு உள்ள தடையை அகற்ற வேண்டும்.
இந்திய மீனவர்கள் 30 வருடகாலமாக இலங்கை கடல்வளத்தை பயன்படுத்துகின்றனர். இதனால், இந்தியாவில் தற்போது இலங்கை வளத்தை பயன்படுத்திய ஓர் தலைமுறையே உருவாகி விட்டது.
இந்தியாவில் கூட மாநிலம் மாறி வேறு மாநிலத்தில் மீன்பிடிக்க முடியாத நிலையில், இலங்கை எல்லைக்குள் வருவதும் பிரச்சினைக்குரிய விடயம்.
இதற்கு இலங்கை மீனவர்களுக்;கு பாரிய கப்பல்களை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். கடற்றொழில் அமைச்சராக டக்ளஸை நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது.
இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ டக்ளசிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது. இதனை வெறும் மீனவர்கள் பிரச்சனையாக மட்டும் அல்ல தமிழர்களின் பிரச்சினையாக பார்க்க வேண்டும் என அரசியல் தலைவர்களை கோர விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.




