
கொழும்பு, ஜுலை 20
விமான தபால் கட்டணங்கள் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால்மா அதிபர் ரன்ஞித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு அதிகரிக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை நான்கு நாடுகளிலிருந்து தபால் பொதிகளை ஏற்றுக் கொள்வதற்கான கட்டுபாடுகள் நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, நெதர்லாந்து ,இஸ்ரேல் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளில் இருந்து தபால் பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, நெதர்லாந்து ,இஸ்ரேல் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளில் இருந்து தபால் பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் கடந்த வாரம் முதல் இடை நிறுத்தப்பட்டிருந்தது.
எரிபொருள் தட்டுபாடு காரணமாக உள்ளக தபால் சேவைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது





