உள்ளக டீல்களில் சிக்காது நேர்மையாக வாக்களியுங்கள்! கரு ஜயசூரிய வலியுறுத்து

இன்றைய தினம் நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தெளிவான சிந்தனையுடன் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டுமே தவிர, எந்தவொரு உள்ளக ‘டீல்களிலும்’ (உடன்பாடுகளிலும்) சிக்கிக்கொள்ளக்கூடாது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உரியவாறு சிந்தித்து வாக்களிக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

வரலாற்றில் மிகமோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் மீட்டெடுக்கவேண்டிய முக்கிய பொறுப்பு 20 ஆம் திகதி புதிதாகத் தெரிவுசெய்யப்படவிருக்கும் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

எனவே இவ்விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தெளிவான சிந்தனையுடன் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டுமே தவிர, எந்தவொரு உள்ளக ‘டீல்களிலும்’ (உடன்பாடுகளிலும்) சிக்கிக்கொள்ளக்கூடாது.

அதேவேளை போராட்டங்களும் அவர்களை எவ்வகையிலும் பாதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply