
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில், அதன் தாக்கம் உலகம் முழுவதுமே பல வகையான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் உலகம் முழுவதும் சூரியகாந்தி எண்ணெய் தட்டுப்பாடு மிக அதிகமாக காணப்படுகிறது.
உக்ரைன் போரினால், ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் சமையல் எண்ணெய் பற்றாக்குறை பெரிய அளவில் பாதித்துள்ளது. எண்ணெய் பற்றாக்குறை காரணமாக ஜெர்மன் நாட்டில், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், பொது மக்கள் மட்டுமல்ல உணவகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது புதுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பீர் அருந்த வரும் நபர் பதிலாக ஒரு லீற்றர் சூரியகாந்தி எண்ணெய்யை கொடுத்து ஒரு லீற்றர் பீரை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இது வரை பீருக்கு மாற்றாக சுமார் 400 லீற்றர் எண்ணெய் கிடைத்துள்ளதாக பார் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
பிறசெய்திகள்





