சம்பந்தன் ஐயா வாக்களிக்க சென்ற விதம்

புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் முடிவடைந்தது.

இதன்போது வாக்களிக்கச் சென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஐயாவுக்கு, உதவிச் செய்யுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் கேட்டுக்கொண்டார்.

அதன்பின்னர், சபை உதவியாளர்கள் மூவர், சம்பந்தனின் ஆசனத்துக்கு அருகில் சென்று, அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தனர்.

வாக்குச் சீட்டையும் தெரிவத்தாட்சி அதிகாரி எழுந்துநின்று வழங்கினார்.

அதன்பின்னர், வாக்கை இடும் கூடாத்துக்குள்ளும் அம்மூவரும் கைதாங்கலாகவே சம்பந்தனை வாக்குப் பெட்டிக்கு அருகில் ​அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை, வாக்குச் சீட்டை பெட்டியினுள் இட்டதன் பின்னர், கைதாங்கலாகவே அவரை, அவரது சீட்டுக்கு அழைத்துச் சென்று அமரச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply