தமிழீழ விடுதலை புலிகள் பாவித்த நிறத்திலான சீருடை ஒன்றினை யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் பாவித்தார்கள் என்ற குற்றச்சாட்டிலே தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்வதாக கூறி யாழ். மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதுவிடயம் தொடர்பான வழக்கு நிறைவு பெற்று தான் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வி.மணிவண்ணன் ஊடங்களுக்கு இன்று தெரியப்படுத்தியுள்ளார்.
அவர் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வரும் போதே இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் தமிழீழ விடுதலை புலிகள் பாவித்த நிறத்திலான சீருடை ஒன்றினை யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் பாவித்தார்கள் என்ற குற்றச்சாட்டிலே தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்வதாக கூறி என்னை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திலே ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் பிணையிலே விடுதலை செய்யப்பட்டு பின்னர் இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக வழக்குக் கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இன்றைய தினம் இந்த வழக்கினை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என்றும், என்னை விடுதலை செய்யுமாறும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது, இந்த விடயத்தினை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியதால் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டிருந்தேன். இது நீதிக்கு கிடைத்த வெற்றி.
யாழ்ப்பாண மாநகரசபை சீருடைகள் சான்றுப்பொருளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்ததுடன் அதுவும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றன.
நான் கைது செய்யப்படத்திலிருந்து எனது விடுதலைக்காக அனைத்து உறவுகளுக்கும் மணமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்றார் .
பிறசெய்திகள்





