
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற்பகுதியில் 650 கிலோ கேரளா கஞ்சாவுடன் மாதகலை சேர்ந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ஊர்காவற்துறை கடற்பகுதியில் அதிகாலை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான படகினை சோதித்த போது 650 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து படகில் இருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ள கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.





