இலங்கையர்களுக்கு அடித்த அதிஷ்டம்!

ஜப்பானில் இலங்கையர்களுக்கு இலவச வேலை வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஐ.எம் ஜப்பான் இணைந்து ஜப்பானுக்கு பணிக்கு செல்லவுள்ள 22 தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளை இன்று வழங்கியது.

இதன் கீழ், கட்டுமானத் துறையில் 14 இளைஞர்களும், செவிலியர் பிரிவில் 8 இளைஞர்களும் பணிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

விமான டிக்கெட் வழங்கும் நிகழ்வில் பணியகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, பொது முகாமையாளர் டி.டி.பி சேனாநாயக்க, ஐ.எம் ஜப்பான் பணிப்பாளர் எம். கோமே, ஐ.எம் ஜப்பானின் புதிய உள்ளூர் பணிப்பாளர் தமுரா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பிறசெய்திகள்

Leave a Reply