
கொழும்பு,ஜுலை 20
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நான்கு சந்தேக நபர்களும் அடுத்த விசாரணை திகதியன்று அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்யத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தினார். இதற்குப் பதிலளித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைக்காகத் தேடப்படும் முக்கிய சந்தேக நபர் ஏற்கனவே நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், இது தொடர்பில் விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.





