
கொழும்பு,ஜுலை 20
இன்று காலி முகத்திடலில் நூற்றுக்கணக்கான பொலிஸாரும் ஆயுதப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரான நிஹால் தல்துவா தெரிவித்தார்.
விரைவில் பாரிய போராட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனால் மேலதிக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ரணில் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்ட சில மணித்தியாலங்களில், காலி முகத்திடலில் அமைந்துள்ள எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சிலைக்கு 50 மீற்றர் சுற்றளவில் எந்தவொரு பிரிவினரும் கூடுவதைத் தடுக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சிலையை சேதப்படுத்தும் திட்டம் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்யக் கூடாது என்று கோரி இன்று காலை மௌனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.





